சாகாத காதல்.!!
கண்களை இறுகமூடிக் கதகதக்கும் உனதன்பை
அணுவணுவாக அனுபவித்து மகிழ்கிறேன்
அணுவணுவாக அனுபவித்து மகிழ்கிறேன்
காற்றை உள்ளிழுத்துவிடுமுன் மூச்சிலே வரும் பாசத்தில் படிப்படியாகக்
கரைகிறேன்
உன் விரல்கள் தொடும் ஸ்பரிசத்தில் விரகமற்ற உணர்வை உணர்வாலே
உணர்கிறேன்
உன்னைவிட்டு விலகாமல் உன்னருகிலிருந்தே உன் உன்னதமான அன்புக்கடலில் அலுப்புத்தீரக் குளிக்கிறேன்
வெளிவருமுன் மூச்சுக் காற்றில் முழுவதுமாக நான் நனைந்தே ஈரமாகிறேன்..
முகத்தில்விழும் முடிகளை ஒதுக்கிவிடும் உனது ஆண்மையிலும் மென்மையை அனுபவித்து வியக்கிறேன்
உனது அருகாமையின் சுகத்தில் இறப்பின்பின்னும் தேவையற்ற சொர்க்கத்தை இன்றே உணர்கிறேன்
தலைநரைத்தபோதும் சாகவில்லை காதலேயுன் தழுவலின்போதும் தழுவவில்லை காமமே.
இற்றைக்கெல்லாம் இவ்வுலகில் இருக்கின்ற காதலில்
இடைவெளியில் கூடக் காற்றை நுழையவிடாக் காதலிதுவென்று
சத்தியமுரைத்துச் சொல்கிறேன்
உன்னை மட்டுமே நான்
உன்னைமட்டுமே நான் உயிராக நினைக்கிறேன்.
சற்றும் என்னைவிட்டு விலகிவிடாதே
சரித்திரத்தில் நம்காதல் சாகாத காவியமாகிவிடும்
எத்தனை பேரல் முடியும்
இதுபோல வாழவே
உத்தமக் காதலிதுவென்றும்
இறக்காது....
இறக்காது மரணமான பின்பும்...
தம்பலகமம் கவிதா.

.jpeg
)

கருத்துகள் இல்லை