திறக்கப்படுகிறது தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரம்!
கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரமாகக் கூறப்படும் தாமரைக் கோபுரம் திறந்துவைக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (திங்கட்கிழமை) முற்பகல் இந்த கோபுரத்தை திறந்து வைக்கவுள்ளார்.
356 மீற்றர் உயரமான இந்த கோபுரம் 12 பில்லியன் ரூபாய் முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதில் 80 வீதமான நிதி சீன அரசாங்கத்தின் நன்கொடையாகும்.
இந்த கோபுரத்தின் நிர்மாணப்பணிக்கான அனைத்து ஆலோசனை சேவைகளையும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் வழங்கி இருந்தனர்.
நட்சத்திர விடுதி, ஹோட்டல்கள், கேட்போர் கூடம், மாநாட்டு மண்டபம் உள்ளிட்ட பல வசதிகள் இந்தத் தாமரைக் கோபுரத்தில் காணப்படுகின்றன.
அதேநேரம், இந்த கோபுரத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் மாடிகள், வானொலி மற்றும் தொலைக்காட்சி அலைவரி ஒலிபரப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
அத்தோடு 3ஆம் மற்றும் 4ஆம் மாடிகள் நிகழ்வுகள் மற்றும் விழா மண்டபங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, தாமரைக் கோபுரத்தின் திறப்பு விழாவை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரையை வௌியிட இலங்கை தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
45 ரூபாய் பெறுமதியான முத்திரை, நினைவுப் பத்திரம் மற்றும் கடித உறை ஆகியன இன்றைய தினம் வௌியிடப்படவுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை