தியாக தீபம் திலீபன் !!

இன்னும் நமக்காக மாய்ந்தவர்களை பற்றி நாம் நம் சந்ததிக்கு ஒன்றொன்றாக சொல்லவேண்டி உள்ளது ...

அதீதமான பேச்சாற்றல் கொண்ட தமிழ் இனத்தின் ஆழுமை - நிதர்சனம் கொண்ட  பார்வையும் ,எப்போதும் சிரித்த முகமும் ,எல்லோரையும் தன் உறவாக பார்க்கும் தன்மையும் அவருக்கே உரிய சிறப்புக்கள் - கட்டம்போட்ட மேலாடை (செக்சேர்ட்) எப்போதும் அவரது அடையாளம். அதிலும் இரண்டு பொத்தான்களை பூட்டாமல் விடுவது அவரது தனித்துவமான ஸ்டைல். யாரோடாவது தன் மனதுக்கு நெருங்கியவர்களோடு நெருக்கமாக பேசும்போது தன் மார்பை தடவிக்கொள்வது அவரது ஆத்மார்த்தமான உணர்வு - அவர் இரண்டாம் நாள் மக்களோடு பேசும்போது அந்த உணர்வை வெளிப்படுத்தியிருந்தார். முதல் முதலாக மேடையில் அவர் அந்த உணர்வை வெளிப்படுத்தியமை மக்கள் மீது அவர் கொண்ட ஆதீத அன்பின் ஆழ்மையான வெளிப்பாடு - அப்போது அவர் ஆழ்மனத்தின் எண்ணங்கள் எல்லாம் நம்மை பற்றியதாகவே இருந்தது என்பதை இப்போதும் உணரமுடிகின்றது - எண்ணிலடங்கா தியாகங்களின் உச்ச பட்ச உருவம் திலீபன் அண்ணா - மாண்புமிகு மகத்துவங்கள் யாவற்றுக்கும் அவரே மூலாதாரம் - சுவாமிகள் ,யோகிகள் யாவருக்கும் மேலான ஆத்மார்த்த குரு - அவர் எப்போதும் தெய்வமாகவே இருப்பார் அதை அவரே கூறியிருந்தார் "நான் மேலே இருந்து பார்ப்பேன் " எங்கள் ஈழம் மலர்வதை என்று .

தியாகச்செம்மல் நினைவுகளில் ....

- ப்ரியமதா பயஸ் -

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.