யாழ். பாடசாலை அதிபருக்கு விளக்கமறியல்!
இலஞ்சம் வாங்கிய யாழ். பாடசாலை அதிபருக்கு விளக்கமறியல் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட அவரை வரும் ஒக்டோபர் 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன் ஒக்டோபர் 3ஆம் திகதி கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் அவரை முற்படுத்த நீதிமன்றம் அனுமதியளித்தது.
யாழ். பிரபல பாடசாலையின் அதிபர், மாணவர் அனுமதிக்கு கையூட்டுப் பெற்று ஊழலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டார்.
அவரை யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்த ஆணைக்குழு அதிகாரிகள், இன்று மாலை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்துவதால் அதிபருக்கு சாதகமான நிலை ஏற்படும் என்பதால் சிறப்பு அனுமதியின் கீழ் பருத்தித்துறை பொலிஸ் ஊடாக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சதா நிர்மலன் முற்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை