மனம் தளராமல் எமது இனத்தின் வரலாற்றினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும்!!📷
நேற்று முன்தினம் தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவேந்தல்
வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஒருவர் வந்து நானும் இங்கு ஏதாவது செய்ய வேண்டும். இந்த நினைவாயலத்தைச் சுற்றி மின்விளக்குகளை பொருத்தவா என்று கேட்டார். திலீபன் அண்ணாவின் நினைவாலயம் தமிழர்களின் சொத்து அதனை மேம்படுத்துவற்கும் அழகுபடுத்துவதற்கும் யாரும் என்னவும் செய்யலாம் என்று கூறினோம். உடனடியாக அவர் சென்று விட்டார் சிறிது நேரத்தின் பிற்பாடு ஒரு ஓட்டோவில் மின்விளக்குகளுடன் வந்தார். பின்னர் அவரே அவற்றினைப் பொருத்தி ஒளிரச் செய்தார். மனதால் விரும்பம் கொண்டு தானாக முன்வந்து அவர் செய்த செயல் திலீபன் நினைவாலயத்தை ஒளிரச் செய்தது
ஒவ்வொரு மக்களும் நினைவாலயத்தில் வந்து அவரைத் தொழும்போதும் கண்ணீர் விட்டு மனதால அழும் போதும் தெரிகின்றது எமது மக்களின் மனங்களில் தியாக தீபம் திலீபன் அண்ணா எவ்வாறு வாழ்கின்றார் என்பது.
அவர் வாழ்ந்த காலத்தில் பிறந்திருக்காத தற்போதைய இளைய தலைமுறைகளுக்கு அவர்களின் தாய் தந்தையர்கள் தியாக தீபத்தின் வரலாற்றினை அவர்களுக்கு கூறும் போது மெய் சிலிர்க்கின்றது.
எமது மக்கள் தாங்களாக வந்து மலர் வைத்து கைகூப்பி தொழுகின்றனர். கண்ணீர் விட்டு அழுகின்றனர். வீதியால் செல்பவர்கள் ஒரு கணம் தங்கள் நெஞ்சில் கைவைத்து வணங்குகின்றனர்.
இளையதலைமுறையினர் அறியாத இவ் வரலாற்றினை அறிவதற்கு அங்கலாக்கின்றனர். வரலாற்றினைக் கூறும் போது இப்படியும் ஒரு தியாகமா? என்று கண்கலங்கி அழுகின்றார்கள். கையெடுத்துக் கும்பிடுகின்றார்கள்.
எமது இனத்தின் கடந்த கால வரலாற்றினையும் தியாகங்களையும் ஒப்பற்ற வீரங்களையும் எமது அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லாமல் இருப்பது எமது இனத்தின் அழிவிற்கு நாமே காரணகர்த்தாக்கள் ஆகின்றோம் என்ற உண்மை அப்போது தான் எமக்கு விளங்கியது.
அந்தவகையில் தியாக தீபம் திலீபன் அண்ணாவின் தியாகத்தினையும் மனஉறுதியையும் தளரா இலட்சியப்பயணத்தினையும் எமக்காக உயிர்நீத்த வரலாற்றினையும் இளையதலைமுறையினரிடம் கொண்டு செல்கின்றோம் என்ற ஆத்மதிருப்தி கிடைக்கின்றது.
தடைகளையும் நெருக்கடிகளையும் கண்டு மனம் தளராமல் எமது இனத்தின் வரலாற்றினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் எமது பயணம் தொடரும்

கருத்துகள் இல்லை