காப்பான் வெற்றி நடையில்!!
லைக்காவின் பிரமாண்ட தயாரிப்பில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ‘காப்பான்’ திரைப்படம் இன்று (வெள்ளிக்கிழமை) உலகெங்கும் வெளியாகி, மக்களின் வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இத்திரைப்படத்தின் அடுத்தடுத்து இரு டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், பல்வேறு தடைகளையும் தாண்டி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைபோடுகின்றது.
‘அயன்’, ‘மாற்றான்’ திரைப்படங்களை அடுத்து சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள இத்திரைப்படத்துக்கு ஆரம்பம் முதலே மக்களிடம் எதிர்பார்ப்பு காணப்பட்டதுடன் இத்திரைப்படத்திற்காண இரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், திரைப்படத்தை பார்த்த மக்கள் அனைவரும் குறித்த திரைப்படத்துக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் சூர்யா நடிப்பில் இதற்கு முன்பு வெளிவந்த ‘என்.ஜி கே’ திரைப்படம் சுமாரான வசூல் மற்றும் வரவேற்பையே பெற்றிருந்த நிலையில், சூர்யாவுக்கு இத்திரைப்படம் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்துள்ளதாக இரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் தெரித்து வருகின்றனர்.
நடிகர் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா, பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகிய இத்திரைப்படம் கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் லண்டனில் பூஜையுடன் ஆரம்பமானது.
எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு பரப்பான சண்டைக்காட்சிகளில் கூடுதல் பரபரப்பை சேர்த்திருக்கிறது.
ஆண்டனியின் படத்தொகுப்பில், ஹரிஷ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் வெளியாகி இரசிகர்களிடையே அதீத வரவேற்பைப் பெற்றுள்ளதுடன் பின்னணி இசை, காட்சிகளின் உணர்வுகளை வலுவூட்டியிருக்கிறது.
எனினும் இத்திரைப்படத்தைக்காண திரையரங்குகளில் இரசிகர்களின் கூட்டம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை