யானைகள் குழப்பமடைந்ததால் 17 பேர் காயம்!

ஜயவர்தனபுர கோட்டே ரஜமகா விகாரையில் நேற்று(07) இரவு இடம்பெற்ற வருடாந்த தலதா பெரஹராவில் கலந்து கொண்ட இரண்டு யானைகள் குழப்பமடைந்ததால் 17 பேர் காயமடைந்துள்ளனர். பெரஹரா ஊரவலம் சென்று கொண்டிருந்த போது இரண்டு யானைகள் குழப்பமடைந்த நிலையில் ஏற்பட்ட பதற்ற நிலையால் குறித்த நபர்கள் காயமடைந்தாக மிரிஹான பொலிஸார் தெரிவித்துள்ளனர். 13 பெண்களும் 4 ஆண்களுமே காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர, களுபோவில மற்றும் கொழும்பு தேசிய வைத்தியாசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
Powered by Blogger.