ஒரு முட்டாள் தமிழனின் வார்த்தையும் வாதமும்..!!

ஏதோ ஓர் அரசியல் தலைவர்கள் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக எதையும் பேசலாம் என்ற எண்ணம் தோன்றியது போலவே இருந்தது இந்த முட்டாள் தமிழனின் வார்த்தை.
ஏறத்தாழ தமிழ் மக்களின் மனதில் 35% வரை இடம்பிடித்து இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ள இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு ஓர் கருத்தை முன்வைத்திற்க்காக இந்த முட்டாள் தமிழன் கட்டாயம் தலைகுனிந்துதான் ஆகவேண்டும்..
முதலில் இந்த முட்டாள் தமிழனை இனைத்து கொண்டது எதற்காக
என்பதினை உணர வேண்டும்?
பெரும்பான்மை மக்களின் ஆதரவு எப்போதும் உண்டு.. ஆதலால் சிறுபான்மை மக்களின் ஆதரவு தான் இப்போதைக்கு அவசியம் என்பதை உணர்ந்த உயர்மட்டம் எடுத்து முடிவாககூட இருக்கலாம் இந்த முட்டாள் தமிழனின் இனைத்து கொண்டது..
ஆனால் இந்த தமிழன் வாதமும் வார்த்தைகளும் இருக்கும் ஆதரவையும் நம்பிக்கையையும் இழக்க செய்யும் வகையில் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
எனவே இந்த முட்டாள் தமிழனுக்கு தான் எதற்காக அழைக்கபட்டார் என்று கூட யூகிக்க திறன் அற்ற நிலையில் சம்பந்தம் இல்லாத வீண் வார்த்தைகளையும் வாதங்களையும் முன் வைப்பது சிறுபான்மை மக்களின் மனதில் வெறுப்பு உணர்வையும் எதிர்மறை எண்ணங்களையே உருவாக்கும். என்பதில் ஐயமில்லை...
பெரும்பான்மை மக்களை இந்த முட்டாள் தமிழன் திருப்திப்படுத்த அவசியம் இல்லை ...
அவர்கள் இதை இந்த முட்டாள் தமிழனிடம் எதிர் பார்க்கவும் இல்லை..
என்பதினை உணர்ந்து நடந்தால்
போதுமானது.
புரிந்து செயல் பட வேண்டும் இல்லையேல் தொலைவில் நின்று வேடிக்கை பார்பது எல்லாவற்றையும் விட மேலானது..
நன்றி.
கருத்துகள் இல்லை