தமிழுக்கு முதலிடம் கொடுக்கும் அவுஸ்திரேலியா!!
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசு தமிழ் மொழியை உள்ளடக்கிய புதிய பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் வசிப்பவர்களில் 39 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் வெளிநாடுகளில், பிறந்தவர்கள். இந்நிலையில் ஆஸ்திரேலிய கலாச்சாரம் பல மொழிகளைக் கொண்டதாக அமைய வேண்டும் என்ற நோக்குடன், ஆஸ்திரேலிய பள்ளி பாடத் திட்டத்தில் உலகில் அதிகம் பேர் பேசக்கூடிய மொழிகளை சேர்க்க முடிவெடுக்கப்படுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசு பள்ளிப் பாடத் திட்டத்தில் அடுத்த ஆண்டு முதல் தமிழ், இந்தி, பஞ்சாபி, பெர்சியன், மெக்டோனியன் ஆகிய 5 மொழிப்பாடங்களை சேர்க்க முடிவு செய்துள்ளது.
அதன்படி நியூ சவுத் வேல்ஸ் மாகாண பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை, இரண்டாவது மொழியாக தமிழ் பயிற்றுவிக்கப்பட உள்ளது. அதற்கான பாடத்திட்டத்தை நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசு வெளியிட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி மொழிகளுக்கு அடுத்தபடியாக தமிழ் ஆஸ்திரேலியாவில் விருப்பப்பாடமாக அமல்படுத்தப்பட உள்ளது

கருத்துகள் இல்லை