நிதானமாக தொடங்கிய இந்திய அணி!

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, ஒருநாள் தொடர்களை வெற்றிபெற்றுள்ள நிலையில் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுவருகிறது.


மேற்கிந்தியத் தீவுகளுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நுழைந்த இந்திய அணி வெற்றியுடன் தனது கணக்கைத் தொடங்கியது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி நடப்பு தொடரை கைப்பற்றுவதுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் புள்ளிகளை அதிகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
ஜமைக்காவில் உள்ள கிங்க்ஸ்டன் சபீனா பார்க்கில் நடைபெறும் இரண்டாவது டெஸ்டில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இந்திய அணி தரப்பில் லோகேஷ் ராகுலும் மய்ங் அகர்வாலும் தொடக்கவீரர்களாக களமிறங்கினர். பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்திய ஹோல்டர் ராகுலை நீண்ட நேரம் நிற்க அனுமதிக்கவில்லை. 13 ரன்களில் அவரை வெளியேற்றினார். அதன்பின் மய்ங் அகர்வால், புஜாரா ஜோடி சேர்ந்தனர். இந்திய டெஸ்ட் அணியின் நம்பிக்கையளிக்கும் பேட்ஸ்மேனான புஜாரா 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் மய்ங் அகர்வாலும் கேப்டன் கோலியும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். அகர்வால் டெஸ்டில் தனது 3ஆவது அரை சதத்தை பதிவு செய்தார். அவர் 55 ரன்கள் எடுத்த நிலையில் ஹோல்டர் பந்து வீச்சில் ரஹீம் கார்ன்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ரஹானே கோலியுடன் ஜோடி சேர்ந்தார். நிதானமாக விளையாடிய விராட் கோலி அரை சதத்தை கடந்தார். இதனையடுத்து ரஹானே 24 ரன்களிலும் கேப்டன் விராட் கோலி 76 ரன்களிலும் வெளியேறினர்.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த நிலையில் விஹாரி, ரிஷப் பந்த் ஜோடி பொறுப்புடன் ஆடி வருகின்றனர். விகாரி 42 ரன்களிலும் ரிஷப் பந்த் 27 ரன்களிலும் களத்திலிருந்த போது முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடி வலுவான ஸ்கோரை எட்டும் போது அது மேற்கிந்தியத் தீவுகளுக்கு சவாலாக அமையும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.