மாவீரர் விபரத்திரட்டல்!📷

மாவீரர் விபரத்திரட்டல்! எம் இனிய உறவுகளே!

மாவீரர் பணிமனை, அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.
31.08.2019.
மாவீரர் விபரத்திரட்டல்


எம் இனிய உறவுகளே!
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்த உன்னத மாவீரர்களை, தமிழீழத்தாயின் வீரக்குழந்தைகளை என்றும் போற்றி வணங்கிடும் வேளையில். அவர் தம் வீரவரலாற்றைப் பேணிப்பாதுகாத்து அடுத்தடுத்த தலைமுறையினரிடம் கொண்டுசேர்ப்பதும் எம் வரலாற்றுக் கடமையாகும்.

இவ் வரலாற்றுப்பயணத்தில் மாவீரர்களின் வரலாறுகளைத் தொகுத்து நூல்களாக அதனை ஆவணப்படுத்துவதோடு, மாவீரர் பெட்டகங்களாக வெளியிடும் பணியினையும் நாம் செய்துவருகின்றோம். இதன் முதற் தொகுப்பாக தமிழீழத் தேசிய மாவீரர்  பெட்டகம் 27.11.1982- 31.12.1995 வரையான காலப்பகுதிக்குரிய மாவீரர்களின் விபரங்களை 2018ஆம் ஆண்டு தமிழீழத் தேசிய மாவீரர் நாளில் வெளியிட்டோம் என்பதை தாங்கள் அறிந்ததே.

எம்மால் உருவாக்கப்படும் மாவீரர் பெட்டகங்களின் உள்ளார்ந்த விபரங்கள் மாவீரர்களின் உண்மையான வரலாறுகளாக அமைய இவை உறுதிப்படுத்தப்பட வேண்டடியவைகளாக உள்ளதுடன் அவர்களது திருவுருவப்படங்களையும், விபரங்களையும் முடிந்தளவு திரட்டியும், இணைத்தும்வருகின்றோம்.

அந்தவகையில் தமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகத்தின் இரண்டாவது தொகுப்பின் முதற்பதிப்பான 01.01.1996 தொடக்கம் 31.12.1998 வரையான 5,296 மாவீரர் விபரங்களில் 69 மாவீரர்களது திருவுருவப்படங்கள் மட்டும் இணைக்கப்பட வேணடியுள்ளதால் இம் மாவீரர்களது குடும்பங்கள், உறவினர்கள், சக போராளிகள், நண்பர்கள் கீழ்காணும் வழிமுறைகளுக்கமைவாக மிக விரைவாக எமக்கு அனுப்பிவைப்பதுடன் தங்கள் பெயர்விபரத்தையும் , தொடர்பாடல் முறையையும் அதில் வெளிப்படுத்தவும். இவ்வாறு பெறப்படும் விபரங்கள் தங்களிடம் மீண்டும் நேரடியாக உறுதிப்படுத்தாமல் எம்மால் இணைக்கமுடியாது என்பதனையும் அறியத்தருகின்றோம். அத்துடன் ;இவ் வீர வரலாற்றுப் பெரும் பணியை நாம் நேர்த்தியாக செய்வதற்கு 1982 ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையில் வீரகாவியமானவர்களில் தமிழீழ விடுதலைப்புலிகளால் மாவீரர் என மதிப்பளிக்கப்பட்டவர்களும், இதுவரை மாவீரர் பட்டியலில் இணைக்கப்படாதவர்களும், தொடர்பிழந்தவர்களும் என வகைப்படுத்தி http://maveerarpeddakam.xn--com-sij1jyb4l/ இணையத்தளத்தின ; ஊடாக விபரங்களைத் திரட்டியவணண்ம் உள்ளோம். இதிலும் தங்களிடம் உள்ள அனைத்து மாவீரர் விபரங்களை பதிவேற்றம் செய்யுமாறு வேண்டிநிற்கின்றோம்.

தொடர்பாடல் வழிமுறைகள் –
1. தொலைபேசி எண் – 0033782900663 2.

மின்னஞ்சல் -maveerar.pettakam@gmail.com

1 கருத்து:

Blogger இயக்குவது.