குருநகர் பகுதியில் வெடிமருந்துகள் மீட்பு!

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் 1 கிலோ 30 கிராம் நிறையுடைய சி4 வெடிமருந்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணம் குருநகர் கொய்யாத்தோட்டம் கடற்கரைப் பகுதியில் அநாமதேயமாக இருந்த நிலையிலேயே வெடி மருந்து கடற்படையினரால் இன்று(வெள்ளிக்கிழமை) மீட்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு பயன்படுத்த எடுத்துச் சென்றிருக்கலாம் என்றும், வெடிமருந்து தொடர்பாக யாரையும் கைதுசெய்யவில்லை எனவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட வெடிமருந்தினை மண்டதீவு கடற்படை முகாமிற்கு கடற்படையினர் எடுத்துச் சென்றுள்ளனர்.

இதேவேளை, வெடிமருந்து தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு எந்த தகவலும் கொடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.