ஊடகவியலாளரிடம் இரண்டரை மணிநேர விசாரணை!
தமிழ் தேசிய பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பாக அப்பத்திரிக்கையின் யாழ்.பிராந்திய அலுவலக செய்தியாளர் தி.சோபிதன் கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு விசாரணைக்காக இன்று சென்றார்.
கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு சமூகமளிக்குமாறு பொலிஸ் தலைமையகத்தில் இருந்து ஊடகவியலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கோட்டாபய ராஜபக்ஷவுடன் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வரதர் தரப்புக்கள் இணைந்து தமிழ் மக்களை மேலும் நசுக்க கங்கணம் கட்டியுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவி மரிய சுரேஷ் ஈஸ்வரி யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இது தொடர்பான செய்தி வெளியாகியமை தொடர்பாகவே அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இதேவேளை, குறித்த ஊடகவியலாளர் கடந்த 2 மாதங்களாக விபத்து ஒன்றில் சிக்கி நடக்க முடியாத நிலையில் இந்த விசாரணையை யாழ்ப்பாணத்திற்கு மாற்றித் தருமாறு பொலிஸ் தலைமையகத்தை கோரிய போதிலும் அது நிராகரிக்கப்பட்டது.
விசாரணை திகதியில் மாற்றம் செய்யலாம் ஆனால் விசாரணைக்கு கொழும்பு தலைமையகத்திற்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை