யாழில் ஞானசாரரிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!

முல்லைத்தீவு- செம்மலை நீராவியடியில் நடைபெற்ற சம்பவத்தைக் கண்டித்தும் அதற்கு காரணமான ஞானசார தேரரைக் கைது செய்ய வலியுறுத்தியும் யாழில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


ரெலோ அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது முல்லைத்தீவு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறி, பௌத்த பிக்குவின் உடல் ஆலய முன்றிலில் எரிக்கப்பட்டதைக் கண்டித்தும் அடாவடியில் ஈடுபட்ட ஞானசார தேரர் மற்றும் அவரது குழுவினரையும் கைது செய்யவேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

அத்துடன் நாட்டில் சாதாரண இளைஞர்கள் செய்கின்ற சிறிய குற்றங்களுக்குத் தண்டனை வழங்கப்படுகின்ற நிலையில், மதத்தை இழிவுப்படுத்திய ஞானசாரர் உள்ளிட்ட ஏனையவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமைக்குக் காரணம் என்னவெனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ரெலோ அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் உட்பட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சட்டம் ஒழுங்கு யார் கையில்? அரசே பதில் சொல்,ஞானசார தேரரைக் கைது செய் போன்ற பல்வேறு பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.