மருத்துவ துறைக்கான நோபல் பரிசு மூவருக்கு!!
மனித உடல் கலங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்ட 3 ஆராய்ச்சியாளர்களுக்கு, மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனைகளை மேற்கொண்டவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், 2019 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டது.
அதன்படி மருத்துவ ஆராய்ச்சியாளர்களான வில்லியம் ஜி,கெலின், சர் பீட்டர் ரேட்கிளிஃப் , கிரேக் எல். செமன்ஸா ஆகியோருக்கு 2019 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மனித உடலுக்கு கிடைக்கும் ஒக்ஸிஜனின் அளவை பொறுத்து கலங்கள் எவ்வாறு தகவமைத்து கொள்கின்றன என்பதை கண்டுபிடித்ததற்காக இந்த 3 மருத்துவர்களுக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை