தாயார் அடித்ததால் 12 வயது சிறுவன் விபரீத முடிவு!!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை- பொலிகண்டி பகுதியில் தாய் கண்டித்ததால் 12 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான்.


பொலிகண்டி தெற்கு வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த அசோக் ரவி ரஹிம்சன் என்ற சிறுவனே உ யிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

பூமாலை கட்டும் பொழுது சகோதரிக்கும், இளைய தம்பியான குறித்த சிறுவனுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதை அவதானித்த தாய், சகோதரிக்கு இடையூறு விளைவித்த சிறுவனை அடித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த சிறுவனை நீண்ட நேரமாக காணாத நிலையில் அவரை தேடியுள்ளனர்.

இதனையடுத்து தூக்கில் தொங்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிறுவனை உறவினர்கள் மீட்டுள்ளனர்.

இதனையடுத்து உடனடியாக வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக சிறுவன் யாழ். போதனா வைத்தியசாலைக்கு இன்று அதிகாலை மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி குறித்த சிறுவன் அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சிறுவனின் இறப்பு விசாரணையினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அலுவலர் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதில் பெரும் சோகத்தை ஏற்படுத்துயுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.