சிங்களத்தின் சூழ்ச்சிக்கு சார்பாக பிரச்சாரம் செய்து திரியும் இரண்டகர்களிடம் இருந்து அனைவரும் விழி்ப்பாய் இருப்போம்.!

இன்று சிலர் புலம்பெயர்ந்தவர்கள் தமிழீழத்தை பற்றி பேசக்கூடாது என வியாக்கியானம் கதச்சுக்கொண்டிருக்கினம்.

ஆனா புலத்தில இருக்கிறவர்கள் எந்த ஒரு பிரதிபலனுமே இல்லாமல் அந்த விடுதலையை எப்படியாச்சும் அடைந்திடவேணும் என்டு கால நேரமில்லாமல் குடும்பத்தை கூட கவனிக்காமல் பெருவசதியாக வாழக்கூடிய வாய்ப்பிருந்தும் எல்லாத்தையும் அந்த நாட்டுக்காகவே செய்து உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் சொந்தக்காசில் நாடு நாடாக சென்று எங்களின் விடுதலைக்காய் ஏதேனும் செய்யுங்கள் எங்களுக்கு நீதி தாருங்கள் என்று பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் தமிழீழத்தையே கண்டிராத இளையோர்கள் அந்த தேசத்தை அடைந்துவிடவேண்டும் என்பதற்காக தம்மை அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் போராடி அவர்களின் இருப்பை தக்கவைக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை எந்த ஒரு நாடும் அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பபோவதில்லை.

ஆனால் தாயகத்தில் இருந்துகொண்டு களத்தையும் புலத்தையும் பிரித்தாளும் சிங்களத்தின் சூழ்ச்சிக்கு சார்பாக பிரச்சாரம் செய்து திரியும் இரண்டகர்களிடம் இருந்து அனைவரும் விழி்ப்பாய் இருப்போம்.
Powered by Blogger.