பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் - நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். கைது செய்யப்பட்டு சிறைக்கூடத்திற்குள் வைக்கப்பட்டிருந்த நிலையில், சந்தேகநபர் வாந்தி எடுத்ததாகவும் அதன் பின்னர் அவரை பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


எனினும், சந்தேகநபர் நேற்றிரவு 11 மணியளவில் உயிரிழந்ததாக பொலிஸார் கூறினர். நீதிமன்ற உத்தரவைப் பெற்றதன் பின்னர், சந்தேகநபரின் உடலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர். துன்னாலை பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

குடும்பத்தகராறு காரணமாக சந்தேகநபரின் மனைவியால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய நேற்றிரவு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் போது சந்தேகநபர் மது அருந்தியிருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

நெல்லியடி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.