நந்திக்கடல் இன்னும் பேச வேண்டும்..!!

நந்திக்கடல் பேசுகிறது என்ற நூலை (ஆவணத்தை) தொகுத்த ஜெராவுக்கும் வெளியிட்ட ஊறுகாய், மற்றும் வொய்ஸ்க்கும் நன்றிகளும், பாராட்டுக்களும்.
பேசப்படாத,பேச முடியாத விடயங்களை பேசுவதற்கு பிள்ளையார் சுழி இட்டுள்ளீர்கள். மறக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் செல்கின்ற தமிழ் சமூகத்தின் கடந்தகாலத்தை குறிப்பாக இறுதி காலத்தை
ஆவணமாக்கியிருக்கின்றீர்கள். இந்த நூலில் எனது அனுபவ தொகுப்பு ஒன்றும்,கட்டுரை ஒன்றும் காணப்படுகின்றமை மகிழ்ச்சியளிக்கிறது. அதற்காக ஜெராவுக்கு நன்றிகள்.
நந்திக்கடல் பேசவேண்டிய விடயங்கள் நிறை இருக்கின்றன.இது அதன் ஆரம்பமாக இருக்கட்டும். நந்திக் கடல் இன்னும் கனதியாக பேசவேண்டும்.இது காலத்தின் கட்டாயம். இந்த முயற்சியில் ஜெரா ஈடுப்பட்டு எங்களோடு தொடர்பு கொண்ட போது அன்று நாம் அதன் கனதியை உணர்ந்துகொள்ளவில்லை. ஆனால் இன்று இதன் அவசியத்தையும், நந்திக் கடல் பேசியே ஆக வேண்டும் என்ற காலத்தின் தேவையினையும் மிகவும் தெளிவாக உணர்ந்திருக்கின்றோம்.
எனவே நந்திக்கடல் மௌனமாகிவிடக் கூடாது, பேசவேண்டும் உரத்து பேச வேண்டும், கனதியாக பேசவேண்டும்.
மு.தமிழ்ச்செல்வன்
13.10.2019
கிளிநொச்சி 

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.