உங்கள் வாக்கு விடுதலை போராட்டத்திற்கானதா? போலி ஜனநாயகத்திற்கானதா?

ஒரு இனத்தின் விடுதலைப்போராட்டம் என்பது கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை எல்லாம் பயன்படுத்தி அதிகார மையத்திற்கு எதிராக போராடுவது. மாறாக சந்தர்ப்பங்களுக்காக விடுதலை போராட்டத்தின் நோக்கங்களை மாற்றுவது விடுதலை போராட்டமாக இருக்க முடியாது.




இந்த வகையான முடிவுகள் இறுதியில் அதிகார மையத்திடம் கையேந்தும் நிலையில்தான் வந்து நிற்கும். இதற்கு போராட்டம் என்பதே தேவையில்லை.
வாக்குரிமை என்பதும் அவ்வாறனது தான், நான் வாக்களிக்க வேண்டுமா? அல்லது வேண்டாமா?

 என்று தீர்மானிக்கின்ற உரிமை எனக்குள்ளது. அது எனது ஜனநாயகமும் கூட. இந்த உரிமையை நான் எனது விடுதலை போராட்டத்திற்கான ஆயுதமாக உபயோகிக்க போகின்றேனா? அல்லது சிங்கள பேரினவாதிகள் கட்டி வைத்துள்ள போலி ஜனநாயகத்திற்காக உபயோகிக்க போகின்றேனா? 

அதனை என்னால் தீர்மானிக்க முடியும்.


புலிகளுக்கு ஜனநாயகம் என்றால் என்னவென்று தெரியாது அதனால் தான் ஆயுதத்தால் போராடினார்கள் என்று கூறுபவர்கள் தான் எமக்கு இப்போது வாக்குரிமையின் ஜனநாயகம் பற்றி வகுப்பெடுக்க ஆரம்பித்தருக்கிறார்கள். தற்போது 2005 இல் புலிகள் செய்தது தவறு என புலிகளை ஆதரிப்பவர்கள் கூட சொல்ல வைத்துள்ளது “புலி நீக்க அரசியல்”

பாலஸ்தீனர்கள் #freePalestine என்ற கோரிக்கையை தான் இப்போதும் முன்வைக்கிறார்கள். எங்களை சுதந்திரமாக வாழவிடுங்கள் மிகுதியை நாங்கள் பார்த்து கொள்கின்றோம் என்பதுதான் அவர்களின் ஒரேயொரு கோரிக்கை.

ஆனால், நாங்கள் #freeTamileelam என்பதிலிருந்து இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை, கலப்பு விசாரணை, சமஷ்டி, ஒற்றையாட்சியுடன் கூடிய சமஷ்டி, என்று தற்போது சஜித்துக்கா? கோத்தவிற்கா வாக்களிப்பது என்பதில் வந்து நிற்கின்றோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.