மட்டக்களப்பில் 14 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு!
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக மட்டக்களப்பு தேர்தல் முறைப்பாட்டு பிரிவுக்கு 14 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மாட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான மாணிக்கம் உதயகுமார் இன்று (புதன்கிழமை) குறித்த தகவலை தெரிவித்தார்.
இதன்படி மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 5 முறைப்பாடுகளும் ஏறாவூர் பிரதேச பொலிஸ் பிரிவில் 5 முறைப்பாடுகளும் ,காத்தான்குடி பிரதேசத்திலிருந்து 2 முறைப்பாடுகளும், வெல்லாவெலி பிரதேசத்திலிருந்து 2 முறைப்பாடுகளும் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வாகனங்கள் சொத்துக்கள் தொடர்பான முறைப்பாடும் அரச அலுவலர்கள் தேர்தல் பிரச்சாரங்களில் தனிநபர்களுக்கு ஆதரவுவழங்குவது தொடர்பான முறைப்பாடுகளும் நியமனம், இடமாற்றம், பதவி உயர்வு சம்மந்தமான முறைப்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், சட்டரீதியான அனுமதியின்றி கூட்டங்கள், ஊர்வலங்கள் பேரணிகள் நடத்தப்பட்டமை தொடர்பான முறைப்பாடுகளும் சட்டவிரோத வைபவங்கள் ஏற்பாடு செய்து அதனூடாகப் பொருட்கள், ஏனையவற்றை விநியோகம் செய்வது தொடர்பான முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை