எரிவாயு சிலிண்டர் வர்த்தகர்கள் கவனத்திற்கு!

நுகர்வோரின் முறைப்பாடுகளை கவனத்தில் கொண்டு கூடுதலான விலைக்கு சமையல் எரிவாயு சிலிண்டரை விற்பனை செய்யும் வர்த்தகர்களை முற்றுகையிடுவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகாரசபை தெரிவித்துள்ளது.
தொடர்ந்தும் அதிகரித்த விலையில் எரிபொருளை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பான தகவல்களை 1977 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பொது மக்கள் அறிவிக்கமுடியும்என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டிருந்த பொழுதும் விலையைக் குறைக்காமல் தொடர்ந்தும் அதிக விலையில் எரிவாயுவை விற்பனை செய்வது குற்றமாகும் என்று அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை கடந்த 4ஆம் திகதி நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு ஒன்றின் விலையை 240 ரூபாவினால் குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.