அவல் தோசை - தேங்காய் சட்னி!!

தேவையானவை: அவல்  200 கிராம், அரிசி  100 கிராம், உப்பு  தேவையான அளவு, கடுகு, இஞ்சி துருவல்  சிறிது, மிளகாய் -1

செய்முறை: அவல், அரிசியை ஒரு மணி நேரம் தனித்தனியே ஊறவைத்து, ஒன்றாகச் சேர்த்து நைஸாக அரைக்கவும். மாவுடன் உப்பு சேர்த்து கடுகு, மிளகாய், இஞ்சி போட்டுத் தாளித்துக் கொட்டி கலக்கவும். தோசைக்கல்லில் மாவை ஊற்றி, மிதமான வெப்பத்தில் தோசைகளைச் சுட்டெடுக்கவும்.

தேங்காய் சட்னி: ஒரு கப் தேங்காய்த் துருவலுடன், 2  பச்சை மிளகாய், 4 டீஸ்பூன் பொட்டுக்கடலை, உப்பு சேர்த்துத் தண்ணீர் விட்டு அரைக்கவும். அவல் தோசைக்கு அருமையான சைடுடிஷ்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.