சர்வதேச இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் கல்முனை மாணவன் பதக்கம்!!
சர்வதேச இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரி மாணவன் கிருஷ்ணகுமார் முகேஷ் ராம் சர்வதேச ரீதியில் வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
வெள்ளி பதக்கம் வென்ற மாணவனை வரவேற்கும் நிகழ்வு கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் அதிபர் அருட் சகோதரர் செபமாலை சந்தியாகு தலைமையில் இன்று இடம்பெற்றது.
அதிகரித்துவரும் வீதி விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பைத் தவிர்க்கும் முகமாக மாணவன் முகேஷ் ராம் தலைகவசத்தினை வடிவமைத்திருந்தார்.
அத்துடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும் வேளை ஆள் நடமாற்றமற்ற இரவு வேளைகளில் ஏற்படுகின்ற விபத்தின் போது போதிய முதலுதவி இன்றி ஏற்படும் உயிரிழப்பைக் கட்டுப்படுத்தும் பாதுகாப்பான தலைக்கவசத்தை(safty helmad) ஐ கண்டுபிடித்ததற்காகவே மாணவன் முகேஷ்ராம் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்த்தா நகரில் 19 வயதிற்குட்பட்ட சர்வதேச புத்தாக்குனர் போட்டி கடந்த 9ம் திகதி தொடக்கம் 12ம் திகதி வரை நடைபெற்றது
சர்வதேச ரீதியில் 260 இளம் கண்டுபிடிப்பாளர்கள் தமது ஆக்கங்களுடன் பங்குபற்றினர். இலங்கையிலிருந்து 12 இளம் கண்டுபிடிப்பாளர்களும் கலந்து கொண்ட நிலையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து கலந்துகொண்ட ஒரே ஒரு மாணவன் முகேஷ் ராம் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை