பாலியல் துஷ்பிரயோகம்: சந்தேகநபருக்கு பிணை மறுப்பு!!

வீதியால் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியை அழைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.


அத்துடன் சந்தேகநபரை ஒக்டோபர் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த சம்பவம் தொடர்பான  வழக்கு இன்று (புதன்கிழமை)  கல்முனை  நீதிமன்ற  நீதிபதி  ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, கடந்த ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சந்தேகநபர் இரு நாட்கள் அட்டாளைச் சேனை பகுதியில் தலைமறைவாகி கைதானார்.

குறித்த சந்தேகநபரை  நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்து குறித்த வழக்கு தொடர்பாக மருத்துவ பரிசோதனைகள் மற்றும் விசாரணை அறிக்கைகள் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து சந்தேகநபரின் சட்டத்தரணிகள் அவரின் வயதினை அடிக்கடி சுட்டிக்காட்டி பிணை விண்ணப்பம் தொடுத்த போதிலும்  நீதிவான் பாதிக்கப்பட்ட மாணவியின் வயதினை சுட்டிக்காட்டி பிணை விண்ணப்பத்தை மறுத்து வருவதுடன் எதிர்வரும் தவணையில்  பாதிக்கப்பட்டவர் தொடர்பாக மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்த வைத்திய அதிகாரியின் வாக்குமூலத்தை மன்றிற்கு வழங்குமாறு  கல்முனை  நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

சம்பவ தினமன்று கல்முனைகுடி சாஹிப் வீதி பகுதியை சேர்ந்த   குறித்த மாணவி வீடு திரும்பிய வேளை கல்முனைகுடி பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர், மாணவியை அழைத்து தனக்கு சவர்க்காரம் ஒன்றினை வாங்கி தருமாறு கோரியிருந்தார்.

இதனை அடுத்து குறித்த மாணவியும் சவர்க்காரம் ஒன்றினை வாங்கி சந்தேகநபரது வீட்டிற்கு சென்று வழங்கியுள்ளார்.

இந்நிலையில்  சந்தேகநபர் அம்மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்தவேளை அயலவர்கள் அதை கண்டு அவ்வீட்டிற்கு சென்றுள்ளனர். இதன்போது மாணவியை கைவிட்டு சந்தேகநபர்  தப்பி  சென்றிருந்தார்.

மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான செய்தி அப்பகுதிக்கு பரவ ஆரம்பித்தபோது அதை அறிந்த சந்தேகநபர் தலைமறைவானார்.

இரண்டு நாட்களின் பின்னர் சந்தேகநபர் அயலவர்களின் ஒத்துழைப்புடன் கைது செய்யப்பட்டார். இதன்போது பாதிக்கப்பட்ட மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.