விண்வெளி வீரர்களுக்கான நவீன உடைகள் அறிமுகம்!

நிலவுக்கான பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான இரண்டு நவீன விண்வெளி உடைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.


அமெரிக்கா எதிர்வரும் 2024-ஆண்டு விண்வெளி வீரர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இந்த நிலையிலேயே குறித்த பயணத்தின் போது விண்வெளி வீரர்கள் அணியக்கூடிய வகையிலான புதிய உடைகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள உடைகளில் ஒன்று நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ளும்போது அவர்கள் எளிதாக அதிகபட்ச அசைவுகளை மேற்கொள்ளும் வகையிலும், எளிதான கைகள் உள்ளிட்ட உடல் இயக்கத்துக்கு வழிவகுக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது உடையான செம்மஞ்சள் நிற உடை விண்வெளி வீரர்கள் நிலவுக்குப் புறப்பட்டுச் செல்லும் போதும், பின்னர் மீண்டும் திரும்பும் போது புவிச் சூழலுக்குள் நுழையும் போதும் ஏற்படும் சூழல் மாறுபாடுகள் விண்வெளி வீரர்களின் உடல் நிலையை பாதிக்காமல் காக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.