உண்மையை வெளிப்படுத்தி விட்டார் கோத்தபாய - சஜித்!
பொய்யை அதிக நாட்கள் தக்கவைக்க முடியாது. ஒருநாளில் உண்மை வெளிவந்தே தீரும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணியினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொடன்கஸ்லந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், “போரை நானோ அல்லது என்னுடைய சகோதரனோ வழிநடத்தி வெற்றிபெறச் செய்யவில்லை. அதற்கான தலைமைத்துவத்தை நாங்கள் வழங்கவில்லை.
மாறாக இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவே போரை வழிநடத்தி, அதற்கான தலைமைத்துவத்தை வழங்கினார் என்பதை கோத்தபாய ராஜபக்ச அவராகவே ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
உண்மையில் இராணுவத்தினரைப் பாதுகாக்க வேண்டும் என்று கருதும் ஒருவர், போரின் பாதிப்புக்கள் தொடர்பான கேள்விக்கு ‘எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.
நான் இதற்குப் பொறுப்புக்கூற மாட்டேன்’ என்று நழுவமாட்டார். இதுவா சிறந்த தலைமைத்துவம்? இதுவா இராணுவத்தினரைப் பாதுகாக்கும் தலைமைத்துவம்?
யுத்தப் பாதிப்பைப் பற்றிக்கேட்டவுடன் கோத்தபாய ராஜபக்ச சரத்பொன்சேகாவை நோக்கி பந்தைக் கைமாற்றிவிட்டார்.
ஆனால் அவரைப் போன்று பந்தைக் கைமாற்றுபவன் நானல்லன். நாட்டின் தலைவன் என்ற ரீதியில் இராணுவத்தினரின் நலனுக்காக எவ்வித அர்ப்பணிப்பையும் செய்யத் தயாராக இருக்கின்றேன்.
ஜனாதிபதி தேர்தலில் எனது பிரதிவாதி கோத்தபாய ராஜபக்ச மேஜர் ஜெனரல் 5 பேரையும், பிரிகேடியர் 5 பேரையும், கேணல் ஒருவரையும், கப்டன் தரத்திலுள்ள இருவரையும் 24 மணிநேரத்திற்குள் பதவியிலிருந்து நீக்கினார். அத்தகைய ஒருவரால் எவ்வாறு நாட்டை முன்நிறுத்தி நியாயமாக செயற்பட முடியும்?
கோத்தபாய ராஜபக்சவினால் ஏன் ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்த முடியாமல் உள்ளது? அவரால் ஏன் ஊடகவியலாளர்களின் வினாக்களை எதிர்கொண்டு பதிலளிக்க முடியாது என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்திருக்கிறது. அதனாலேயே செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி கேட்க முடியாத நிலையை உருவாக்கி வைத்திருந்தார்.
ஆனால் எனது சவாலுக்கு இணங்கியேனும், நேற்று அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் உண்மையை கூறிவிட்டார். பத்துவருடங்களின் பின்னர் அவர் உண்மையை வெளிப்படுத்தியது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே வேளை இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் இராணுவத்திடம் சரணடைந்த 13,784 பேர் முறையாக புனர்வாழ்வளிக்கப்பட்டு மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு முன்னாள் செயலாளரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை