ஒரு கட்சியுடன் இணைந்து பத்திரிக்கையாளர் மாநாட்டினை வைப்பது ஏற்புடையதா?


ஒரு பத்திரிக்கையாளர் மாநாட்டினை ஒரு கட்சி சார்பானவர்கள் நடாத்துவார்கள் அல்லது ஒன்றுபட்ட அரவணைப்பில் உள்ள அனுசரணையில் உள்ள கட்சிகள் சேர்ந்து நடாத்துவார்கள். ஆனால் தமிழ்மக்களின் பிரநிதிதிகள், நாம் தமிழ்மக்களின் பிரச்சனைகளுக்காக மூன்று பிரதான கட்சிகளுடனும் பேரம் பேசப்போகின்றோம் என்று கூறிக் கொண்டு அதில் ஒரு கட்சியுடன் இணைந்து பத்திரிக்கையாளர் மாநாட்டினை வைப்பது ஏற்புடையதா?

எதிர் எதிர் பக்கமாக இருந்து தமிழ் மக்களின் கோரிக்கைகளை பேரம் பேசலின் மூலம் சாதித்து விட்டு ஒன்றாக இணைந்து பத்திரிக்கையாளர் மாநாட்டினை வைப்பதே களயதார்த்தம் ஆனால் இங்கு நிலமை தலை கீழாக உள்ளது.

நாம் இன்னமும் யாரையும் ஆதரிக்கவில்லை எங்கள் கோரிக்கைகளை ஏற்பவர்களை மட்டுமே நாம் ஆதரிப்போம் என்று கூறிக்கொண்டு பேரம் பேசவேண்டிய ஒரு கட்சியுடன் இணைந்து பத்திரிக்கையா ளர்களைச ; சந்திப்பது இணக்க அரசியலின் ஒரு புது வடிவம். இல்லாவிட்டால் குறித்த கட்சி தமிழ்மக்களின் பிரநிதிகளின் கோரிக்கைகளை ஏற்றுகொண்டு விட்டதா என்ற கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டிய தேவையும் குறித்த தரப்புக்களுக்கு உண்டு.

இரு கட்சிகளின் முக்கிய இரு பிரமுகர்கள் இணைந்து பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் அளவுக்கு இணக்கமும் நெருக்கமும் இருக்கும் நிலையில் இனி எவ்வாறு தமிழ் மக்கள் சார்பாக பேரம் பேசல்கள் நடைபெறப் போகின்றது என்ற வினாவும் உள்ளது.

அடுத்த விடயம்
ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்து கையெப்பம் இட்ட ஆவணத்தால் தெற்கில் சிங்கள பௌத்த பேரினவாதம் மீண்டும் இனவாதத்தினை கக்குக்கின்றது. தமிழ்மக்கள் தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை வெளிப்படுத்தும் போது சிங்கள பௌத்த பேரினவாதம் இவ்வாறு நடந்து கொள்வது காலகாலம் நடைபெறும் நடைமுறை. தமிழ்மக்களின் கோரிக்கைகளை நிராகரிப்பதாக கோட்டபாய ராஜபக்ச அணியை சேர்ந்த விமல் வீரவன்ச கூறிப்பிட்டு இருந்தார் அது மட்டுமின்றி அவர் இன்னொன்றையும் குறிப்பிட்டு இருந்தார் இவ் தமிழ்மக்களின் கோரிக்கைகளை தொடர்பாக சஜித் பிரேமதாசாவின் பதில் என்ன என்பதனை தான் எதிர் பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆரம்பத்தில் இருந்தே ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதில் தயக்கம் காட்டினார். ஏன் எனில் சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் ரணில் விக்கிரமசிங்காவில் அரசியல் அஸ்தமனம் என்பது யாவருக்கும் வெளிப்படை. இருந்த போதிலும் கட்சி பிளவுபடக்கூடாது என்பதற்காக கட்டாயத்தின் பெயரில் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தார். அதே போல பல்வேறு பட்ட சந்தர்ப்பங்களில் ரணில் விக்கிரமசிங்காவுக்கு ஆதராவாக சுமந்திரன் அவர்களும் பல்வேறு வடிங்களில் செயற்பட்டார். ரணில் விக்கிரம சிங்கா வேட்பளராக வந்தால் தான் தமிழ் மக்கள் வாங்களிப்பார்கள் என்று அறிக்கை வேறு விட்டார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கோரிக்கைளை முன்வைத்த தமிழ்மக்களின் பிரதிநிதிகளில் முக்கியமான ஒருவர் ரணில் விக்கிரமசிங்காவுடன் இணைந்து ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடாத்தும் போது அது தெற்கில் ஐக்கிய தேசிய கட்சி தமிழ்மக்களின் கோரிக்கைகளை ஏற்றுவிட்டார் என்கின்ற ஒரு எண்ணப்பாட்டையே தோற்றுவிக்கும் என்பது வெளிப்படை. அது தெற்கில் இனவாதத்திற்கு தூபம் இட்டு கோட்டாபாஜ ராஜபக்சவுக்கான வாங்குவங்கியை அதிகரிக்கும்.

இவ்வாறான பல பின்னணிகளுக்கு மத்தியில் இவ் இரு நெருக்கமான இணக்கமான இருவரும் சேர்ந்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது இவர்களுக்கு வேண்டாத விரும்பதா சஜித் பிரேமதாசாவை தோற்கடிக்கின்ற ஒரு நிகழ்ச்சி நிரலாகவும் இருக்கலாம். கௌரவ உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார் நாங்கள் யாரும் எதிர்பார்க்காத ஒரு முடிவினை வெளிப்படுத்துவம் என்று . இது தான் அந்த சாணக்கியம் நிறைந்த முடிவா என்றும் எண்ணத் தோன்றுகின்றது.

ஒரு வேளை என்னுடைய அனுமானம் தப்பாக இருக்கலாம். ஏன் எனில் என்னுடைய அரசியல் அனுபவம் மிக மிக குறைவு. ஆனால் கௌரவ சுமந்திரன் அவர்கள் தமிழ்மக்களின் ஒரு பிரதிநிதியாக இருந்து கொண்டு அவர்களுடன் பேரம் பேசலில் ஈடுபடுவோம் என்று கூறிக்கொண்டு ரணில் விக்கிரமசிங்காவுடன் பத்திரிக்கையாளர் மாநாட்டில் ஒன்றாக கலந்து கொண்டது என்னுடைய அறிவுக்கு எட்டியவரை ஒரு தவறான விடயம்.

ஆனால் கௌரவ சுமந்திரன் அவர்களை தலைவராக தளபதியாக சாணக்கியளனாக பார்ப்பவர்கள் இக் கருத்தை என்றுக்கொள்ளவும் மாட்டார்கள் இதுவும் அவரது மென்வலு பாதையின் ஒரு வகிபாகம் என்றே கருத்துரைப்பார்கள் என்பதும் வெளிப்படை

வரதராஜன் பார்த்திபன்
மாநகரசபை உறுப்பினர்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.