குடாநாட்டு மக்களிற்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!

நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நாடு தழுவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.


தற்பொழுது நிலவும் மழையுடனான காலநிலையயை அடுத்து டெங்கு நோய் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்றும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர தெரித்துள்ளார்.

விஷேடமாக யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு அதிகமாக காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் 55,723 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்த மாதத்தில் கடந்த 17 ஆம் திகதி வரையில் 3,998 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மேல் மாகாகணத்தில் மாத்திரம் 26,666 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, டெங்கு நோயினால் இந்த வருடத்தில் 74 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.