துப்பாக்கியா, சோறா தீர்மானியுங்கள்- ரணில் காட்டம்!
நாட்டின் வாக்காளர்கள் சோறு சாப்பிட வேண்டுமா? அல்லது துப்பாக்கி சூடுகளை எதிர்கொள்ள வேண்டுமா என்பதை நவம்பர் 16ஆம் திகதி தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாத்தளை லக்கல பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கை மக்கள் விவசாயத்தை மேற்கொள்ள அதனை நவீனமயப்படுத்த வேண்டும் என்கூறிய பிரதமர், விவசாய சங்கங்களுக்கு சலுகை அடிப்படையில் உபகரணங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பூத இயந்திரத்தையும் சுனாமி இயந்திரத்தையும் எதிர்வரும் 5 வருடங்களுக்கு சலுகை அடிப்படையில் பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் தெரிவித்த அவர் ,அதனைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் வரவிருக்கும் பெரிய பூதத்தை தோற்கடித்து விடுங்கள் என்றும் கூறியுள்ளார்.
இப்போது உரங்களை இலவசமாக வழங்கி வரிகளை குறைப்பதாக கூறுபவர்கள், ஏன் அவர்களின் ஆட்சி காலத்தில் பொருட்களின் விலைகளை குறைக்க முடியாமல் போனது? எனவும் பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் நாட்டின் வாக்காளர்கள் ஒரேயொரு தீர்மானத்தைதான் மேற்கொள்ள வேண்டும் என்றும் , அது சோறு வேண்டுமா அல்லது துப்பாக்கிவேண்டுமா என்பதை நவம்பர் 16 ஆம் திகதி மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை