அவுஸ்திரேலியாவில் கோர விபத்தில் இலங்கை இளைஞன் பரிதாபமாக பலி!!
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் இடம்பெற்ற வீதி விபத்தில் இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் 21 வயதான லொரென்சோ ஜூரியன்ஸ் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரொரென்சோ ஜூரியன்ஸ் தனது வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, நான்கு இளைஞர்களை ஏற்றிக்கொண்டு வந்த வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த இலங்கை இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
லொரென்சோ ஜுரியன்ஸ் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் தனது குடும்பத்துடன் அவுஸ்திரேலியா சென்று குடியேறியுள்ளார் என தெரியவந்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் Hampton Park மேல்நிலைக் கல்லூரியில் அவர் கற்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார். அன்பான நண்பனை இழந்து விட்டோம் என பேஸ்புக்கில் அவரது நண்பர்கள் இரங்கல் வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை