தமிழ் பாடசாலையில் சிங்கள அதிபரை நியமித்தமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு தமிழ் அதிபர் ஒருவர் சேவையில் இருக்கும்பொழுதே அப்பாடசாலைக்கு சிங்கள அதிபர் ஒருவரை நியமித்துள்ளமையை ஆட்சேபித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
அப்பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து ஹட்டன் தலவாக்கலை பிரதான வீதியை மறித்து இன்று (திங்கட்கிழமை) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கொட்டகலை பிரதேசம் தமிழ் மக்களின் ஆதிக்கத்தை கொண்ட பிரதேசமாகும். இங்கு பிரதானமாக காணப்படும் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு தமிழ் அதிபர் ஒருவரே இருக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அக்கரப்பத்தனை ஹோல்புறுக் பகுதியிலிருந்து இடமாற்றம் பெற்றுள்ள சிங்கள அதிபர் அப்பகுதியில் மக்களின் அவப்பெயரை பெற்றவர் என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேநேரத்தில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தமிழ் அதிபர் ஒருவர் கடமையில் இருக்கும்பொழுதே நிரந்தரமாக ஒரு சிங்கள அதிபரை நியமித்தமையை தாம் கண்டிப்பதாகவும் மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனையடுத்து போராட்டக்களத்திற்கு வந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் நிலைமையை ஆராய்ந்து சிங்கள அதிபரை உடனடியாக இடமாற்றம் செய்யவேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
அதற்கமைய புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிபரை இடமாற்றம் செய்வது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து, ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை