இலங்கை கணக்கிடுதல் தொழிநுட்பக் கழகத்தின் விருது விழா!!
இலங்கை கணக்கிடுதல் தொழிநுட்பக் கழகத்தினால் நடத்தப்படும் வருடாந்த சிறந்த அறிக்கையிடுதல் போட்டியில் தேசிய ரீதியில் வெற்றியீட்டிய பாடசாலைகளுக்கான விருது வழங்கும் விழா பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த விழா எதிர்வரும் திங்கட்கிழமை (28.10.2019) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்ஹ, இலங்கை வங்கி நிதி திட்டமிடல் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் ரஸ்ஸல் பொன்சேகா உட்பட கல்வி அமைச்சின் இன்னும் பல அதிகாரிகளும் இலங்கை கணக்கிடுதல் தொழிநுட்பக் கழகத்தின் துறைசார் நிபுணர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும் தேசிய விருதும், சான்றிதழும் பரிசும் வழங்கும் விழாவுக்கு தேசிய, மாகாண, மாவட்ட மட்டத்திலிருந்து பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இலங்கை கணக்கிடுதல் தொழிநுட்பக் கழகத்தினால் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு கலைமகள் வித்தியாலயம் மூன்றாவது தடவையாக இம்முறையும் தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் எஸ். தில்லைநாதன் தெரிவித்துள்ளார்.
ஊழலற்ற சிறந்த கல்வி நிருவாகத்திற்கு வெளிப்படையான செயற்பாட்டு அறிக்கைகள் முக்கியம் என்பதால் சிறந்த பாடசாலை மட்ட நிருவாகத்தை ஊக்குவிக்கும் வகையில் இப்போட்டி வருடாந்தம் நடத்தப்பட்டு வருவது பாராட்டத்தக்கது என கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை