ஆட்சி மாற்றம் ஒன்று வருமாக இருந்தால் உடனடியாக பிரச்சினைகள் தீர்க்கப்படும்!
ஆயுத பலத்தினூடாக பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்று ஒரு காலத்தில் ஆயுதங்களை தூக்கினோம். ஆனால் அந்த ஆயுதப் போராட்டம் சரியாக முன்னெடுக்கப்படவில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மன்னார் சாவட்கட்டு கிராமத்தில் இன்று (22) காலை 11 மணி அளவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், மக்கள் எதிர்நோக்கி வருகின்ற நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வு காண தற்போது வழி ஏற்பட்டுள்ளது. மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தல் வந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் வெற்றி பெறுகின்ற நிலையில் அந்த வெற்றியை உங்களுடைய வெற்றியாக்கிக் கொள்ளுங்கள்.
கடந்த காலங்களில் எல்லாம் தேர்தல்கள் இடம்பெற்றுள்ளது. வேட்பாளர்கள், வேட்பாளர்களை ஆதரிக்கின்ற அரசியல்வாதிகள் அனைவரும் மக்களை உசுப்பேத்தி வாக்குகளை அபகரித்து தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுகின்றார்களே தவிர மக்களின் தேவைகள் பிரச்சினைகளை தீர்த்த மாதிரி இல்லை.
வாழ்வாதாரமாக இருக்கலாம், அரசியல் உரிமை பிரச்சினையாக இருக்கலாம், காணிப் பிரச்சினையாக இருக்கலாம், வீட்டுப் பிரச்சினையாக இருக்கலாம். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்த பாடில்லை.
எனவே, வர இருக்கின்ற சந்தர்ப்பத்தை பயண்படுத்தி நீங்கள் வெற்றி பெற வேண்டும். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நோக்கம் அதனுடைய வேலைத் திட்டம், தென் கொள்கைத் திட்டம் எல்லாம் மக்கள் வெற்றி பெற வேண்டும் என்பதே. மக்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் சரியான ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும். அதனூடாக மக்களினுடைய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.
மக்களினுடைய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால் தான் மக்கள் வெற்றியடைந்தமைக்கு சமன். எனவே, வர இருக்கின்ற சந்தர்ப்பத்தை பயண்படுத்தி அந்த வெற்றியின் பங்குதாரர்களாக உங்களை மாற்றிக் கொண்டு நீங்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். உங்களுக்கு நாங்கள் சரியான வழியை காட்டுகின்ற போது நீங்கள் அதனை பின்பற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு பின்பற்றும் பட்சத்தில் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
நடந்தது நடந்து முடிந்ததாக இருக்கட்டும். நடக்கப் போகின்றது நல்லதாக இருக்கட்டும். வர இருக்கின்ற சந்தர்ப்பங்களை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். எங்களுக்கு ஓர் அரசியல் பலம் தேவை. அரசியல் பலத்தினூடாகவே நாம் பிரச்சினையை தீர்க்க முடியும்.
நாங்கள் ஒரு காலத்தில் பிரச்சினைகளுக்காக ஆயுதங்களை தூக்கினோம். ஆயுத பலத்தினூடாக பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்று. ஆனால் அந்த போராட்டம் சரியாக முன்னெடுக்கப்படவில்லை. இலங்கை - இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டது. சர்வதேச மாற்றங்கள் ஏற்பட்டது. இயக்கங்களுக் கிடையில் வெட்டுக் கொத்துகள் ஏற்பட்டது.
அதனால் நாங்கள் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டோம். ஆனால் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட தமிழ் தலைமைகளும் சரியாக அதனை நடத்தவில்லை. எனவே, வர இருக்கின்ற சந்தர்ப்பத்தை ஈ.பி.டி.பி யை பின் பற்றி பயன்படுத்துங்கள்.
உங்கள் பிரச்சினைகள் விரைவில் தீரும். ஆட்சி மாற்றம் ஒன்று வருமாக இருந்தால் உடனடியாக உங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும். உங்களுக்கு வளமான வாழ்வாதாரமும் ஏற்படுத்தி தரப்படும்.
உங்களிடம் வாக்கு கேட்க வந்தாலும் உங்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். எனவே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மொட்டு சின்னத்திற்கு உங்களின் வாக்குகளை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் போது கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை