நருஹிட்டோ ஜப்பானின் 126 வது மன்னரானார்!!

ஜப்பான் நாட்டின் புதிய மற்றும் 126 ஆவது மன்னராக நருஹிட்டோ இன்று (செவ்வாய்க்கிழமை) சம்பிரதாயபூர்வமாக முடிசூடிக்கொண்டார்.


தலைநகர் ரோக்கியோவில் உள்ள இம்ப்ரியல் அரண்மனையில் இன்று நடைபெற்ற எளிய விழாவில் மன்னரின் முடிசூட்டிம் நிகழ்வு இடம்பெற்றது.

ஜப்பான் நாட்டின் 125-வது மன்னராக ஆட்சி புரிந்த அகிஹிட்டோ (வயது 85) வயோதிபம், உடல் நலக்குறைவு ஆகியவற்றின் காரணமாக பதவி விலக விருப்பம் தெரிவித்தார். ஜப்பானில் கடந்த 200 ஆண்டுகளில் எந்த மன்னரும் பதவி விலகியதாக வரலாற்றுத் தகவல்களில் குறிப்பிடப்படவில்லை.

பதவி விலகுவதற்கான விதிகளும் சட்டத்தில் இல்லை என்பதால், மன்னர் பதவி விலகுவதற்கான பிரேரணை கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் நாடாமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மன்னர் அகிஹிட்டோ கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி முடிதுறந்தார்.

126-வது மன்னராக பட்டத்துக்கு வந்த இளவரசர் நருஹிட்டோ மே மாதம் முதலாம் திகதி மன்னரின் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.

முறைப்படி ஜப்பானின் மன்னராக முடிசூட்டப்பட்டு அவர் பதவியேற்றாலும் சம்பிரதாயப்படி இம்ப்ரியல் அரண்மனையில் உள்ள அரியாசனம் எனப்படும் மன்னரின் ஆசனத்தில் அமரும் வைபவம் இன்று எளிய முறையில் நடைபெற்றது.

அண்மையில் ஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயலால் பலர் உயிரிழந்த நிலையில் இன்றைய விழாவை எளியமுறையில் நடத்த மன்னர் நருஹிட்டோ விரும்பினார்.

மேளதாளங்கள் முழங்க அவர் அரியாசனத்தில் ஏறி பதவி பிரமாண உறுதிமொழி ஏற்ற நிகழ்ச்சியை காண அரச குடும்பத்தினர், உறவினர்கள், பிரித்தானிய இளவரசர் சார்லஸ், தென்கொரியா பிரதமர் லீ நாக்-யோன், 190 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு பிரமுகர்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் அரண்மனையில் திரண்டிருந்தனர்.

‘இந்த நாட்டின் அதிபராக நான் இன்று முடிசூட்டிக் கொண்டதை நமது மக்களுக்கும் உலகத்துக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜப்பான் மக்களுக்கு பக்கபலமாக நின்று இந்நாட்டின் சின்னமாகவும் மக்களின் ஒருமைப்பாட்டுக்கான அடையாளமாகவும் எனது கடமையை நான் நிறைவேற்றுவேன். ஜப்பான் மக்களின் மகிழ்ச்சிக்காகவும் உலக அமைதிக்காகவும் நான் எப்போதும் பிரார்த்திப்பேன் என உறுதியேற்கிறேன்’ என பிரமாணப் பத்திரத்தை அவர் வாசித்தார்.

மன்னர் உறுதிமொழி ஏற்றபின்னர் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே, ’ஜப்பான் மக்களின் ஒருமைப்பாடு மற்றும் இந்த நாட்டின் அடையாளமாகவும் திகழும் பெருமதிப்புக்குரிய உங்களுக்கு நாங்கள் மரியாதை செலுத்துவோம்’ என்று தெரிவித்ததுடன் ‘மன்னர் பல்லாண்டு வாழ்க!’ என்னும் பொருள்பட ஜப்பானிய மொழியில் ‘பன்ஸாயி’ என்று மூன்று முறைவாழ்த்து கூறினார். மற்ற விருந்தினர்களும் அதை எதிரொலித்தனர்.

அரண்மனையில் வெளியே அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான தொலைக்காட்சிகள் மூலம் பலத்த மழைக்கு மத்தியிலும் அந்த காட்சியை கண்டு பரவசமடைந்த பொதுமக்களும் மன்னரை வாழ்த்தி முழக்கமிட்டனர்.

வரலாற்று சிறப்புமிக்க இன்றைய விழாவையொட்டி சிறிய குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சுமார் 50 லட்சம் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஹகிபிஸ் புயலால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அரியணை ஏறிய மன்னர் மரபுகளின்படி ஊர்வலமாக அழைத்து செல்லப்படும் சம்பிரதாய நிகழ்ச்சி மட்டும் நவம்பர் 10-ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மன்னருடன் ராணியாக இன்று அரியணை ஏறிய மசாக்கோ-வுக்கு ஐக்கோ(17) என்னும் ஒரே மகள் உள்ளார். அந்தநாட்டின் மரபுகளின்படி அரச குடும்பத்தின் பெண் வாரிசுகள் யாரும் பதவிக்கு வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.