ராணுவ பதற்றங்களை அதிகரிக்க அமெரிக்கா ஏவுகணை சோதனை நிகழ்த்தலாம் - ரஷியா!
நாடுகளிடையே இராணுவ பதற்றங்களை அதிகரிக்க பசுபிக் பெருங்கடல் பகுதிகளில் அமெரிக்கா ஏவுகணை சோதனைகளை மேற்கொள்ளலாம் என ரஷியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுத பயன்பாட்டை கட்டுப்படுத்தும் விதமாக அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் இடையே கடந்த 1987ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
நடுத்தர தொலைவு அணு ஆயுதங்கள் உடன்படிக்கை (ஐ.என்.எப்.) என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம், நிலத்தில் இருந்து ஏவப்படும் சிறிய மற்றும் நடுத்தர தூர அணு ஆயுத ஏவுகணைகளை இரு நாடுகளும் பயன்படுத்த தடை விதிக்கிறது.
கடந்த ஆகஸ்ட் 3ம் திகதி அமெரிக்கா ஒப்பந்தத்தை விட்டு வெளியேறியதால் ஒப்பந்தம் ரத்தானதாக ரஷியா அறிவித்தது.
இந்நிலையில், நாடுகளிடையே ராணுவ பதற்றங்களை உருவாக்க அமெரிக்கா, குறுகிய மற்றும் நடுத்தர தொலைவு ஏவுகணை சோதனைகள் மேற்கொள்ளலாம் என ரஷியா பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கை சோய்கு தெரிவித்துள்ளார்.
சீனாவில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான 9வது சியாங்சன் மாநாட்டில் செர்கை சோய்கு கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர் ‘பசுபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள இடங்கள் மற்றும் ஐரோப்பிய பிராந்திய பகுதிகளில் ராணுவ பதற்றங்களை உருவாக்க அமெரிக்கா ஏவுகணை சோதனைகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது என்று கருத காரணங்கள் உள்ளன. அவ்வாறு நடந்தால் அது ஆயுதப் போட்டிக்கு வழி வகுக்கும், மேலும் மோதல்கள் அதிகமாக நடைபெறவும் வாய்ப்புகள் அதிகமாகும்.
ஆர்வமுள்ள அனைத்து தரப்பினருடனும் நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு நடவடிக்கைகளை வளர்த்துவரும் நாங்கள் பிராந்திய ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம்’ என அவர் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை