போட்ஸ்வானாவில் 100 யானைகள் உயிரிழப்பு!


தென் ஆபிரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த இரண்டு மாதங்களில் சுமார் நூற்றுக்கும் அதிகமான யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானைகளின் உயிரிழப்புக்கு ஆந்த்ராக்ஸ் தொற்று ஒரு காரணமாக இருக்கலாம் என்று போட்ஸ்வானா அரசாங்கம் சந்தேகம் வௌியிட்டுள்ளது. கடந்த 7 நாட்களில் மாத்திரம் 14 யானைகள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் குறித்து ஆரம்பகட்ட விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், சில யானைகள் உயிரிழந்தமைக்கு ஆந்த்ராக்ஸ் தொற்று காரணமென விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதேவேளை, வேறு சில யானைகள் வறட்சி காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.

2014 ஆம் ஆண்டில் இருந்து 2018 ஆம் ஆண்டு வரை உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 593 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதில் சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்டு உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கையே அதிகளவாக இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தநிலையில், போட்ஸ்வானா நாடானது சுமார் 130,000 யானைகளுக்கு இருப்பிடமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.