வாக்காளர் அட்டைகள் நாளையதினம் கையளிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வமான வாக்காளர் அட்டைகள் நாளை தபால் திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இத்தகவலை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட உள்ள நிலையில், அடுத்த மாதம் 3 ஆம் திகதி வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் உத்தியோகபூர்வ தினமாகும்.

நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் அருகில் உள்ள தபால் நிலையங்களுக்குச் சென்று தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டைகளை பெற்றுக் கொள்ளமுடியும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வமான அட்டைகளை பிரசுரிக்கும் நடவடிக்கை அடுத்த மாதம் 6 ஆம் திகதிக்கு முன்னர் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை இந்தவருடம் ஒரு கோடி 70 ஆயிரம் வாக்காளர் அட்டைகள் பிரசுக்கப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.