வெடிகுண்டுடன் மோடியை மிரட்டும் பாகிஸ்தான் பாடகி!
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பாடகி ஒருவர் உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் பாடகியான ரபி பிர்ஜடா மோடிக்கு மிரட்டல் விடுக்கும் விதத்தில் டிவிட்டரில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் உடலில் டைமர் எனப்படும் கடிகாரத்துடன் கூடிய வெடிகுண்டுகளைக் கட்டிக்கொண்டு இடுப்பில் கை வைத்தபடி உள்ளார். அந்த புகைப்படத்தின் அருகில் ‘மோடி ஹிட்லர், காஷ்மீரின் மகளாக நான் விரும்புகிறேன்’ என்றும் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் பதில் பதிவிட்ட ஒருவர் ‘பாகிஸ்தானின் கலாசார உடையில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்’ என்று தெரிவித்திருந்தார். மற்றொருவர் ‘பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், உங்கள் நாட்டின் தேசிய உடையாக, இந்த உடையை அறிவிக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.
பாடகி ரபி பிர்ஜடா இத்தகைய சர்ச்சை பதிவு இடுவது இது முதன்முறையல்ல. ஏற்கனவே காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த செப்டம்பர் மாதம் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் சில பாம்புகளையும், முதலைகளையும் கட்டவிழ்த்துவிட்டு, பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பதிவிட்டிருந்தார்.
ایک کشمیری لڑکی کی تیاری مودی کے خلاف، ویسے تو اس نے جہنم میں جانا ہی ہے، مگر اس جیسے انسا ن کی دنیا بھی جہنم ہونی چاہیے۔ #chotisibaat youtu.be/p0W5gFD59_0
இதைப் பற்றி 1,164 பேர் பேசுகிறார்கள்
இந்த விவகாரத்தில் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையம் அவர் மீது புகார் அளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக லாகூர் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து இருந்தது.
கருத்துகள் இல்லை