பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை!!
பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞானம் நாளை (25) வெளியிடப்படவுள்ளது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக கொண்ட பொதுஜன பெரமுன தரப்பு, தனது உத்தியோகபூர்வ தேர்தல் விஞ்ஞாபனத்தை நாளை வெளியிடும். தாமரைத்தடாக அரங்கில் இது வெளியிடப்படும்.
இதுவரை கோட்டாபய தரப்பு மேடையில் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டு வந்தபோதும், உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் நாளை வெளியாகும்.
கோட்டாபய தரப்பு மேடைகளில் பேசியதாக சிறுபான்மை சமூகங்களிற்குள் பரவிய செய்திகளிற்கு விடையாக இந்த தேர்தல் விஞ்ஞாபனம் அமையுமென பொதுஜன பெரமுனவின் பிரமுகர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார். தமிழ்மக்களின் முன்னுரிமை பிரச்சனைகள் சிலவற்றிற்கான தீர்வுக்காக காலஎல்லையையும் விஞ்ஞாபனத்தில் வெளியிட வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.
இரண்டு பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞஞாபனத்தை பார்த்த பின்னரே தமது நிலைப்பாட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிக்குமென குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், கூட்டமைப்பிற்கு நெருக்கடியேற்படுத்தும் விதமான அம்சங்கள் தமது விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டிருக்குமென அந்த பிரமுகர் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பு மாற்றம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஒழிப்பு, தேர்தல் முறை மாற்றத்தை உள்ளடக்கிய அரசியலமைப்பு மாற்றமும் விஞ்ஞாபனத்தின் முக்கிய அம்சமாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, மாகாணசபைமுறைமையை ராஜபக்ச குடும்பம் நீண்டகாலமாக விரும்பாத நிலையில், அதில் மாற்றம் ஏற்படுத்தி பிரதேசசபைகளை வலுப்படுத்தும் திட்டங்கள் குறித்து குறிப்பிடப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல்கைதிகள் விடுதலை, வடக்கு கிழக்கு தொழில்துறை அபிவிருத்தி, வடக்கு மீள்கட்டுமானத்திற்கு விசேட அலகு உள்ளிட்ட விவகாரங்கள் விஞ்ஞாபனத்தில் இருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை