தோல்வி முயற்சியின் தடைக்கல்!!

தோல்வி சாண் ஏற
முழம் சறுக்கும்
முயற்சியின் தடைக்கல்

மனதால் சோர்ந்து விட்டால்
வெற்றி கூட தோல்வி தான்

சிலந்தியிடத்தில் காலையில்
கற்று கொண்டேன்

அதன் வலைப்பின்னலை
ஒருவர் அழித்தார்
ஒருதரம் இரண்டு தரம்

அந்த சிலந்தி முயற்சியில்
தளரவில்லை

மீண்டும் முயற்சி செய்து
தனது வீட்டை
உருவாக்கி கொண்டது

தோல்வியிடம் தோற்று போகாமல்
வெற்றியிடம் வழி கேட்டு
தோற்று கொண்டது

அப்போது புரிந்தது
நாங்கள் முயற்சியிடம் தோற்று விட்டு
தினமும் புலம்புகிறோம்
தோல்வி தோல்வி என்று

அடிக்கு மேல் அடித்தால்
பாறையும் உடையும்

முயற்சியிடம் தோற்று போங்கள்
ஆனால் சோர்ந்து விடாதீர்கள்.
-தம்பி நாடன்-
25.10.2019
பிரான்ஸ். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.