பிகில்: பார்சிலோனா கொண்டாட்டம்!

தீபாவளியை முன்னிட்டு விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகியிருக்கிறது ‘பிகில்’.

“விஜய் சார் நிலையில் இருக்கும் ஒருவர் எளிதாக ஒரு மாஸ் படம் செய்ய ஒப்புக்கொண்டிருக்கலாம். ஆனால் அவர் இப்படத்தில் பெண்கள் உரிமைக்கான படத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். எழுத்து, இயக்கம் என இரண்டு விதத்திலும் ’பிகில்’ இதுவரை நான் எடுத்ததில் சிறந்த படமாக இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்லமுடியும்” என பிகில் பாடல் வெளியீட்டு விழாவிலேயே படத்தின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தார் அட்லீ.
ரசிகர்களின் நாடித் துடிப்பை நன்கறிந்த இளம் இயக்குநர் அட்லீ, பிகில் படத்தின் மூலம் ‘வேற லெவல்’ கொண்டாட்டத்தை திரையில் கொடுக்கவிருக்கிறார். தொடர்ந்து தன்னுடைய படங்களில் பெண்களை கண்ணியமாக காட்சிப்படுத்தி வரும் அட்லீ, இப்படத்தில் இன்னும் உச்சமாக பெண்களுக்கான அரியணையை திரைக்களத்தில் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.
பிகில் படத்தின் மற்றொரு பிரம்மாண்டமாக வந்திருப்பது கால்பந்து. தமிழில் வெளியாகும் ‘ஸ்போர்ட்ஸ்’ சினிமாக்களில் கால்பந்திற்கான இடம் சற்றுக் குறைவு. கால்பந்தாட்டத்திற்கான அரங்கு, பயிற்சி என பட்ஜெட்டை எகிற வைக்கும் இந்த செல்வாக்கான விளையாட்டை மூன்று மணி நேர சினிமாவாக மாற்ற ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மென்ட் போன்ற பெரும் நிறுவனத்தால் மட்டுமே சாத்தியமாகும். பிகில் கால்பந்தாட்டத்திற்கான கெளரவமாகவும் வந்திருக்கிறது.
பிகில் இயக்குநர் அட்லீ இது குறித்து கூறும் போது, “சர்வதேச கால்பந்து ஆட்டங்களுக்கு இணையாக பிரம்மாண்டத்துடன் 'பிகில்' படத்தின் கால்பந்தாட்டக் காட்சிகள் இருக்கும். பார்சிலோனா ஆட்டத்தைப் பார்க்கும் அனுபவத்தை ரசிகர்களுக்குத் தர வேண்டும் என விரும்பினேன். பிகில் படத்தில், படக்குழுவின் உழைப்பினால் அதைச் சாத்தியமாக்கியிருக்கிறோம்” எனக் கூறினார்.
ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மென்ட் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், விவேக், கதிர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
இசை: ஏ.ஆர். ரஹ்மான்,
ஒளிப்பதிவு: ஜி.கே.விஷ்ணு,
 படத்தொகுப்பு: ரூபன்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.