சிவாஜிலிங்கத்திற்கு தேர்தலில் விலக காலக்கெடு!!

தமிழ்த் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள எம்.கே.சிவாஜிலிங்கம், எதிர்வரும் 3ஆம் திகதிக்குள் தேர்தல் களத்திலிருந்து விலகாவிட்டால், அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என டெலோவின் செயலாளர் நாயகம், ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.


வவுனியாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி தேர்தலில் இருந்து அவர் விலகவேண்டும் என்பதை நாம் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

எதிர்வரும் 3ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தேர்தல் களத்தில் இருந்து அவர் விலகத்தவறினால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அதற்கான அதிகாரத்தை கட்சியின் தலைவர் மற்றும் செயலாளரிற்கு தலைமைகுழு வழங்கியிருக்கிறது.

இந்த விடயத்தில் கட்சியினுடைய கட்டுப்பாடு கட்டிக்காக்கப்படவேண்டும் என்பதுடன் எந்தவித பாரபட்சமும் தயவும் எவருக்கும் காட்டமுடியாது என்று கட்சியின் தலைமைகுழு தீர்மானித்துள்ளது” என மேலும் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.