சுஜித் கிணற்றிற்குள் விழுந்தது எப்படி!!
ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தையை மீட்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மூடப்பட்டதாக சொல்லப்பட்ட அந்த கிணற்றில் குழந்தை விழுந்தது எப்படி? என்பதே அனைவரின் கேள்வியாகவும் உள்ளது.
மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த தம்பதி பிரிட்டோ - கலாமேரி. இவர்களுக்கு சுர்ஜித் வில்சன் என்ற 2 வயது குழந்தை உள்ளான்.
பிரிட்டோ ஒரு கட்டிட தொழிலாளி. அத்துடன் வீட்டு பக்கத்தில் விவசாயமும் செய்து வந்தார்.
பிரிட்டோ தன் வீட்டுக்கு தண்ணீர் வேண்டும் என்பதற்காக 7 வருஷத்துக்கு முன்னாடி வீட்டின் தோட்ட பகுதியிலேயே ஆழ்துளை கிணறு அமைத்திருந்தார்.
சுமார் 400 அடி ஆழத்திற்கு அந்த ஆழ்துளை கிணறு அப்போது அமைக்கப்பட்டது.
ஆனால் ஒரு வருஷம் வரை அந்த ஆழ்துளை கிணறு பயன்பாட்டில் இருந்தது. இதற்கு பிறகு அதில் தண்ணீர் இல்லை. அதனால், அந்த ஆழ்துளை கிணற்றை யாருமே பயன்படுத்தவில்லை என்பதால், அதனை மூடும் வகையில், மேல்மட்டம் வரை மண்ணை கொட்டியுள்ளனர்.
இந்த மண்ணை வலுவாக கொட்டியதாக தெரியவில்லை. அதற்குள் அந்த பகுதியில் சோளம் சாகுபடி செய்ய தொடங்கிவிட்டனர். இந்த சமயத்தில்தான் மணப்பாறையில் சிலநாட்களாக மழை பெய்து வந்தது. இந்த மழை காரணமாக, ஆழ்துளை கிணற்றை மூடியிருந்த மண் சுமார் 30 அடி ஆழம் வரை கீழே இறங்கியதாக தெரிகிறது.
அதாவது, அங்கு போடப்பட்ட மண் கரைந்து உள்ளே சென்று, அந்த குழி மீண்டும் திறந்து கொண்டது.
இதை யாருமே கவனிக்கவில்லை. இந்நிலையில்தான் நேற்று மாலை குழந்தை விளையாடி கொண்டே இந்த பக்கமாக வரும்போது, கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துவிட்டான்.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் மீட்பு படையினருக்கு தகவல் அளிக்கவும்தான், அடுத்தடுத்த மீட்பு பணிகள் தொடங்கின. குழந்தையை பத்திரமாக மீட்கும் நோக்கில் முதலில் குழந்தையின் ஒரு கையில் கயிறு மூலம் சுறுக்கு போடப்பட்டது.
மேலும் மற்றொரு கையில் கயிறு மூலம் சுறுக்கு போட முற்பட்ட போது அது பலன் அளிக்கவில்லை. மீண்டும் அம்முயற்சியை மேற்கொண்ட நிலையில் அக்குழந்தை பத்திரமாக மீட்க அனைத்து விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதனிடையே குழந்தையை மீட்க நள்ளிரவு கோவையில் இருந்து மேலும் ஒரு குழுவும் வந்து முயற்சியில் ஈடுபட்டனர்.
இதைதவிர, குழந்தையை மீட்க மீண்டும் பக்கவாட்டில் குழி தோண்டும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டும் அதுவும் வீணாகிவிட்டது..
ஆனால் குழந்தைக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டுள்ளது தற்போது வரை நிம்மதியாக இருக்கிறது. எனினும் பல வழிகளில் குழந்தையை மீட்க எடுத்து கொண்ட முயற்சிகள் எல்லாமே தோல்வியில் அடைந்துள்ளதால், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குழந்தையை மீட்டு விட வேண்டும் என்று உலகமே பிரார்த்தனை செய்து வருகிறது. சுர்ஜித்தை மீட்க வேண்டும் என்று ராமதாஸ், விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட தலைவர்களும் வலியுறுத்தி உள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை