உடல்சிதைந்து துர்நாற்றம் வீசியது’ - அதிர்ச்சி அளித்த தகவல்!
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்திருப்பதாக வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
திருச்சி மணப்பாறையில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணி நான்காவது நாளாக நடைபெற்று வந்தது. குழந்தை விழுந்த ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகே ரிக் இயந்திரம் மூலம் துளையிடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
ஆனால், நள்ளிரவு 2 மணியளவு திடீரென தோண்டுவதற்கான பணிகள் நிறுத்தப்பட்டது. அப்போது, ஏதோ நடந்துவிட்டதாக கருதப்பட்டது. பின்னர், வருவாய் ஆணையர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போதுதான் அந்த அதிர்ச்சியான தகவலை அவர் தெரிவித்தார்.
“குழந்தை உள்ள ஆழ்துளை குழாயில் இருந்து நேற்று இரவு 9.30 - 10 மணியளவில் துர்நாற்றம் வீசுவதாக அங்கு நிரந்தரமாக உள்ளவர்கள் கூறினார்கள். மருத்துவ குழுவினரை உடனே உள்ளே அனுப்பினோம். குழந்தையின் உடல் அதிக அளவில் சிதைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். குழி தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. உடலை எப்படி எடுப்பது என்பதை தேசிய பேரிடர் குழுவின் வழிகாட்டுதலின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை