மாணவர்கள் ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் இணைந்தனர்!!
ஈராக்கில் அரசுக்கு எதிரான தொடர்ச்சியான இடம்பெற்றுவரும் போராட்டங்களில் (ஞாயிற்றுக்கிழமை) மாணவர்களும் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அந்நாட்டின் பிரதமர் அடில் அப்துல் மஹ்திக்கு எதிராக, மூன்று வாரங்களுக்கு மேலாக அங்கு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
கடந்த வாரம் ஈராக் தலைநகர் பக்தாத், பஸ்ரா, மாய்சன் ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட போராட்டங்களைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது.
போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர். இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
இந்த நிலையில் நேற்று இடம்பெற்ற அரசுக்கு எதிராக போராட்டத்தில் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
பக்தாத்தில் உள்ள தாஹ்ரிர் சதுக்கத்தில் கூடிய மாணவர்கள் அரசுக்கு எதிராக முழுக்கமிட்டனர். போராட்டம் நடத்திய மாணவர்கள் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 77க்கு அதிகமான மாணவர்கள் காயம் அடைந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஒக்டோபர் மாதம் இதுவரை நடைபெற்ற போராட்டங்களில் ஈராக்கில் 231 பேர் உயிரிழந்துள்ளதாக ஈராக் மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை