பொய்கள் வினோதமானவை.!

தேடிய இடத்தில் கிடைக்காததால்
தேடலை முடித்துக்கொள்ள
 நினைத்துக்கொண்டிருக்க

மாற்றங்களைசுமக்க ஆரம்பிக்கிறது
மாமிச உருண்டை
உருவை மறந்து
உணர்வையும் கொஞ்சம் கொஞ்சமாய்
உப்புநீரால் கழுவிக்கொண்டது

ஏனிந்த மாற்றத்தை ஏற்க நினைத்திருக்கிறது
மாமிசம் இன்னும் சில
காலக்கழிப்பில்
புழுக்கள் உண்டுவிடக்கூடும்
என்பதால் மட்டுமல்ல

உயிருடன் உண்ணப்பல
ஓனாய்கள் வட்டமிடுவதாலும் கூட
ஏனென்றால்
பிடித்துப் புணர்தல் வேறு
புணர்வதற்காகவே பிடித்தல்போல்
நடித்தல்வேறு😐😐😐

 அழகு திலகா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.