கனமழையால் ஜப்பானில் பாதிப்பு!!

ஜப்பானில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள் காரணமாக இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.


‘ஹகிபிஸ்’ புயல் ஜப்பானின் டோக்கியோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தாக்கி பேரழிவை ஏற்படுத்தியது.

இந்த புயல் காரணமாக 78 பேர் உயிரிழந்தனர். சுமார் 400 பேர் காயமடைந்தனர்.

இந்த பாதிப்பிலிருந்து மீள்வதற்குள் நியோகுரி, புலாய் என்ற இரு புதிய புயல்கள் ஜப்பானை நெருங்கி வருவதாகவும் 22ஆம் மற்றும் 26ஆம் ஆகிய திகதிகளில் கரையை கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அங்கு கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

சுமார் 2,000 பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பட்டுள்ளனர்.

முக்கிய நகரங்களில் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விமான சேவையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.