மர்ம குழுவினர் சஹாரானின் பயிற்சி முகாமில் நடமாட்டம்!!
சஹ்ரான் குழுவினரின் பயிற்சி முகாமாக இருந்த புத்தளம் வனாத்துவில்லு தென்னந்தோட்டத்தை இன்று சிஐடியினரும், அரச பகுப்பாய்வு திணைக்களத்தினரும் ஆய்வு செய்தனர்.
பெருமளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்ட அந்த இடத்தில் அண்மையில் மர்மநபர்களின் நடமாட்டம் இருந்ததாக கிடைத்த தகவலையடுத்தே இன்று மாலை இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
புத்தளம் வனாத்துவில்லுவில் உள்ள லக்டோ தோட்டத்தில் இருந்து கடந்த ஜனவரி 16ம் திகதி பெருமளவு வெடிபொருட்களை சிஐடியினர் கைப்பறியிருந்தனர்.
மாவனெல்லவில் புத்தர் சிலைகளை உடைத்த குழுவினரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த இடம்பற்றிய தகவல்களை சிஐடி பெற்றிருந்தது.
அத்துடன் இந்த தென்னந்தோட்டத்தில் சஹ்ரானினால் இராணுவப் பயிற்சியும் வழங்கப்பட்டு வந்திருந்தது.
இந்நிலையில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதையடுத்து, அந்த பகுதியை சிஐடியினர் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தனர். அண்மையில், தென்னந்தோப்பிற்கு உரிமையாளர் மட்டும் சென்றுவர பொலிசார் அனுமதி வழங்கியிருந்தனர்.
இந்தநிலையில், கடந்த 24ம் திகதி மர்ம நபர்கள் குழுவொன்று அந்த தோட்டத்திற்கு சென்றுள்ளதோடு, வீட்டின் கொங்கிறீட் தளம் உடைக்கப்பட்டு, பல அடிகள் ஆழத்திற்கு நிலம் தோண்டப்பட்டிருந்தது.
எனினும் வீட்டின் மையத்தில் தோண்டப்பட்ட குழியிலிருந்து ஏதாவது பொருட்களை எடுத்துச் சென்றார்களா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
அங்கு ஏதாவது ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்தனவா என்பது குறித்து அரச பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகளும் பொலிஸாரும் தற்பொழுது அங்கு பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை