அம்பாறையில் வெள்ள நீரில் கொட்டும் மீன்!

நாட்டில் மாரி கால பருவ மழை ஆரம்பித்துள்ள நிலையில் பெருமாபால பிரதேசங்களில் மழைபெய்து வருகின்றதனால் குளங்கள், ஆறுகள் என்பன நிரம்பியுள்ளன.


இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தில் ஆறு மற்றும் குளம் ஆகியவற்றில் அதிகளவான மீன் இனங்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பாலத்தின் அருகே இன்று வடிந்தோடும் வெள்ள நீரில் அதிகளவான சிறு மீன் முதல் பெரிய மீன்களை அத்தாங்கு மற்றும் எறி வலை மூலம் பலர் பிடிக்கின்றனர்.

இவ்வாறு அதிகமான பிடிக்கப்படும் மீன்களை சமையலுக்காக அவ்விடத்தில் மீனவர்களால் விற்கப்படுவதுடன் மக்கள் ஆர்வமாக கொள்வனவு செய்வதனையும் காண முடிகிறது.


தற்போது பெய்யும் மழை காரணமாக நன்னீர் மீன் பிடி கிட்டங்கி ஆறு, கல்லாறு, கோட்டைக்கல்லாறு ஆறு, மருதமுனை கரச்சைக்குளம் போன்றவற்றில் அதிகளவாக மீன்கள் பிடிக்கப்படுகிறது.

இதில் கோல்டன் செப்பலி கணையான் கொய் கொடுவா கெண்டை விரால் சுங்கான் விலாங்கு போன்ற மீன்கள் அதிகளவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.


அத்துடன் இதர மீன்களான கெண்டை(கெளுறு) பனையான் மீசைக்காரன் ஆகியவை குறைந்த விலையில் விற்பனையாகின்ற நிலையில் நன்னீர் மீன் பிடித்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் நல்ல வருமானம் ஈட்டக்கூடியதாக உள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.


மேலும் வெள்ள நீரில் அள்ளுண்டு வரும் ஆற்றுவாழைகளை கனரக வாகனத்தின் உதவியுடன் அகற்ற பிரதேச சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிகபடுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.